15ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாலசிங்கம் மெய்யழகன்

தாய் மடியில் : 19, Feb 1958 — இறைவன் அடியில் : 05, Jul 2002வெளியீட்ட நாள் : 19, Jun 2017
பிறந்த இடம் - யாழ். புங்குடுதீவு கண்ணகிபுரம்
வாழ்ந்த இடம் - யாழ். புங்குடுதீவு கண்ணகிபுரம்

திதி : 19 யூன் 2017

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் மெய்யழகன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

உறவுமுறை கூறி உறவாடும் உத்தமரே
உங்கள் உள்ளம் அது வெள்ளை தானே!
உயர்வான குணங்கள் பல கொண்டவரே
உதிரும் புன்னகை கொண்டு எம்
துன்பம் தனை துடைப்பவரே!

வசந்தகாலம் என்றால் அது
உங்களோடு வாழ்ந்த காலம் தானே!

வாழ்க்கை என்பது இறைவன் அவன்
வகுத்த வரைதானே
அடுக்கடுக்காக ஆண்டுகள் பதினைந்து சென்றன
அருகில் நீங்கள் இல்லாததால் உங்கள்
அன்பு தனை இழந்தோமே நாம்!

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் நினைவில் வாழும் அண்ணன், தங்கை, தம்பிமார்,
அண்ணி, மைத்துனன், மைத்துனிமார்கள்,
மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்,
சீனி ஐயா, குஞ்சி ஐயா, குஞ்சியம்மாமார், மாமா, மாமி.

“ பல விடுகதைகளின் நாயகன்
திருவிழாக் காலங்களில் எங்கள் கதாநாயகன்”
என்றும் உன் நினைவோடு நண்பர்கள்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசந்தரூபன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +16474074813
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com