1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சோமசுந்தரம் இராஜமோகன் (மோகன்)

தாய் மடியில் : 12, Oct 1957 — இறைவன் அடியில் : 21, Jun 2016வெளியீட்ட நாள் : 10, Jul 2017
பிறந்த இடம் - யாழ். புங்குடுதீவு
வாழ்ந்த இடம் - பிரான்ஸ் Vitry-sur-Seine

திதி : 10 யூலை 2017
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈழத்திருநாட்டில் யாழ் நகரின் தென்பால்
புங்கை ஊர் மண்ணில் புருஸோத்தமன்
ராஜமோகன் பிறந்தார்
எமது குடும்பக் குலவிளக்கே
எமை மறந்து எங்கு சென்றீர்

கண்ணுக்குள் கலையாக பொன்முகம்
இன்றும் எம்முடன் இருப்பதுபோல்
நாங்கள் எல்லோரும் எண்ணியிருக்க
எண்ணத்தை ஏமாற்ற ஓர் ஆண்டு
இமைப் பொழுதாய் மறைந்தது அப்பா

கருணை அற்ற இறைவன் செயலால்
கலங்கியே மாய்கின்றோம் அப்பா
சீராட்டி தாலாட்டி சிந்தனைக்கு
அறிவுரைகள் ஊட்டி எம்மை
வழிநடத்தி வந்த அன்புத் தெய்வமே!

எமக்கு யார் இருக்கிறார் இனிமேல்
உங்கள் ஆசைகள் யாவற்றையும்
உங்கள் அறிவுரைக்கு அமைய
வென்றெடுப்போம் நாங்கள்

எத்தனை ஆண்டுகள் ஓடினாலும்
உங்களை மறவோம் அப்பா
உங்கள் ஆத்மா சாந்திக்காக
பரமன் அவன் பாதங்களை
வேண்டி நிற்போம் தினமும்

ஒரு கணப் பொழுது கூட மறவாமல் வாழும்
அன்பு மனைவி பிள்ளைகள்
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருமதி இராஜமோகன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33651128694
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com