7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஸ்வலிங்கம் விமலராசா

தாய் மடியில் : 26, Feb 1960 — இறைவன் அடியில் : 02, Jul 2010வெளியீட்ட நாள் : 13, Jul 2017
பிறந்த இடம் - யாழ். உடுப்பிட்டி
வாழ்ந்த இடம் - சுவிஸ் Zürich
திதி : 14 யூலை 2017

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் விமலராசா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஏழு வருடமாய் ஏங்கித் தவிக்கின்றோம்
ஏரி கடல் எல்லாப் பக்கமும் தேடுகின்றோம்
எட்டுத் திசையும் உங்கள் ஞாபகமே
ஏழு ஜென்மம் எடுத்தாலும் உங்களை நாங்கள் மறவோம்

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்
இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என
நில்லாமல் நிமிராமல் உழைத்தவரே
பொல்லாத காலனவன் கொண்டு போனதென்ன

உங்கள் அன்பான வார்த்தைகளை கண்டு
கண்ணீர் வடிக்கின்றோம்
பாசத்தின் இருப்பிடமே பார்க்கும் இடம் எல்லாம்
வண்ண மலர் போல வாசம் தந்தீர்களே

அணைக்கின்ற கைகளும்
அழகிய புன்னகையையும்
அன்பை சுமந்த இதயத்தையும் ஆண்டவன்
பறித்தது ஏன்….?

சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்

நீங்கள் இருக்கும் வரை துன்பத்தை பார்த்ததில்லை
நீங்கள் கண் மூடிய பின் தினம் தினம் துன்பமே
பாசத்தின் இருப்பிடமே பார்க்கும் இடம் எல்லாம்
வண்ண மலர் போல பாசத்தை காட்டினீர்கள்

அழகிய புன்னகையும் அன்பான பார்வையும்
அள்ளி அள்ளி வீசினீர்கள்
ஆறுதல் கூற முடியாத சில வலிகள்
அடுத்தவர் முன் காட்டுவதில்லை

ஆண்டவன் பாசத்தில் அலை அலையாய் கண்ணீர்கள்
எத்தனை போராட்டம் எங்கள் வாழ்வில்
அத்தனையும் அடுக்கடுக்காய் சுமந்தோம்- ஆனாலும்
ஆண்டவன் எங்களைக் கைவிடவில்லை

அத்தனைக்கும் பதில் தந்தார் ஆண்டவன்
உடலுக்கு உயிர் எப்படி முக்கியமோ- அது போல
ஒரு குடும்பத்திற்கு அப்பா என்னும் உறவும் முக்கியம்
தன்னலம் பாராது அடுத்தவருக்கு உதவினீர்கள்

தரணி எங்கும் உங்கள் புகழ் மறையவில்லை
நேர்மைக்கு இலக்கணமாம் நேராத பாதையிலே
நெடும் தூரம் சென்றது என்ன? மனதுக்குள் நீங்களும்
உயிருக்குள் உங்கள் நினைவுகளும் இருக்கும்

எங்கள் குடும்பத்திற்கு எப்போதும்
ஒரு காவியத் தலைவந்தான் நீங்கள்
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்
”ஓம் சாந்தி ஓம்சாந்தி”
தகவல்மனைவி, பிள்ளைகள்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com