30ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராசா தர்மபாலசிங்கம் (Bata பாலா- பொரளை Bata பாலா உரிமையாளர்)

தாய் மடியில் : 31, Jul 1947 — இறைவன் அடியில் : 15, Jul 1987வெளியீட்ட நாள் : 13, Jul 2017
பிறந்த இடம் - யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் - கொழும்பு
திதி : 13 யூலை 2017

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா தர்மபாலசிங்கம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னார், நடராசா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நகுலேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜ்கண்ணா(பிரித்தானியா), சங்கீதா(லண்டன்), சர்மிளா(கனடா), திவியா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஸ்வநாதன்(பிரித்தானியா), உதயசேகரன்(கனடா), விபூசிதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

அஜயனா, அனிசன், நவசினி, விஹசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அப்பா காலம் கரைந்து கடகடவென போனாலும்

மனதில் அழியாத நினைவாய் நீங்களப்பா

நீங்க விட்டு போனாலும்
உங்க நினைப்பு விட்டு போகலப்பா.....

நெஞ்சமெல்லாம் உங்க நினைவு

நித்தம் எல்லாம் உங்க பேச்சு அப்பா
நடைபழகும் காலத்தில் கைபிடிக்க நீங்களில்லை...
கதைகேட்டு துயில் கொள்ள
உங்கள் மார்பில் இடம் கிடைக்கவில்லை...

தூரத்தில் வரும் சாமி
உங்கள் தோள் ஏறி பார்த்ததில்லை.....
பள்ளி படிப்பில் பாடம் சொல்ல நீங்களில்லை....
விளையாட்டில் பட்ட வலி மருந்து
இட காலம் அது வரவே இல்ல...

பார்த்து பார்த்து எங்களுக்காய்
நீங்க செய்ய கருணை அற்ற காலன்
உங்கள விடவே இல்லை

அப்பா...

சின்ன வயசுல உங்கள நாங்க இழந்திட்டோம்
ஆனாலும் நினைப்பில உங்கள நிறைச்சிட்டோம்

எத்தனை பேர் இருந்தாலும் 
உங்களை போல் யாருமில்லை..
ஆதலால் அப்பா மறுபடி பிறந்து எங்க
வீடு வர வேண்டும் நீங்க......வரவிற்காய் காத்திருக்கும்........!
மனைவி, பிள்ளைகள்
தகவல்கண்ணா பாலா(மகன்)

தொடர்புகளுக்கு

- — பிரித்தானியா
தொலைபேசி: +447537859163
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com