6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாலசிங்கம் நிதர்ஷன்

தாய் மடியில் : 03, Sep 1992 — இறைவன் அடியில் : 31, Jul 2011வெளியீட்ட நாள் : 31, Jul 2017
பிறந்த இடம் - சுவிஸ் Lausanne
வாழ்ந்த இடம் - சுவிஸ் Lausanne
சுவிஸ் Lausanne ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் நிதர்ஷன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புக்கோர் இலக்கியமாய்
அவனியிலே உலா வந்தவனே!
அபயம் என வந்தோர்க்கு
அடைக்கலம் அளித்தவனே!

எம்முடனே நீ இருந்தால்
எவருமில்லை எமக்கு நிகர்!
இப்போ நீயின்றி போனதால்
நிதர் நிலைகுலைந்து போனோமே!

ஏன் இந்த நிலை எமக்கு
எங்கு போனாய் எம் உறவே!
வையத்துள் வாழும் எமை மறந்து
வாணுலகம் போனாயோ?

உன் உருவம்
நீயின்றி போனதால்
நினைவழிந்து போனதே!
எம் நெஞ்சம் இங்கு வேகுதே!

ஆறுதல் வார்த்தைகளை
ஆர் தருவார் நிதர் இனி நமக்கு!
ஆருயிர் உறவே வேறு உயிர்
உனக்கு வருமா?

பூமுகம் பார்ப்போமா?
அதில் புன்னகை காண்போமா?
நிதர் நீ முந்திப் போனதால்
நிர்க்கதியாய் நிற்கின்றோம்
நினைவிழந்து போய் விட்டோம்!
ஆறுதல் தர வருவாயோ மாட்டாயோ?

உன் பிரிவால் துயருறும் அப்பா, அம்மா,
உற்றார், உறவினர்கள்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com