1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தசாமி ஜெயபாலன் (ஜெயா)

தாய் மடியில் : 18, Nov 1963 — இறைவன் அடியில் : 01, Aug 2016வெளியீட்ட நாள் : 01, Aug 2017
பிறந்த இடம் - யாழ். புங்குடுதீவு
வாழ்ந்த இடம் - சுவிஸ் Oberburg

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Oberburg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி ஜெயபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் ஆருயிர்த் தெய்வமே என் அன்பார்ந்த உத்தமரே
எங்கள் அகல் விளக்கு அணைந்ததென்ன
உங்கள் பூமுகம் எங்கே உங்கள் புன்சிரிப்பெங்கே
எங்கள் அழியாச் சொத்து அலைமோதிப் போனதென்ன
உற்ற துணையிழந்து உருகி மடிகின்றேன்!

எங்கள் அன்புச் செல்வமே பாசமுள்ள அப்பாவே
எங்கள் அருகிருந்து எமை வளர்த்து ஆளாக்கி
கல்வி பயில வைத்து கடைத்தேறும் வேளைதனில்
எம் கடமை செய்யும் முன்னே எமை விட்டுப் பிரிந்ததென்ன
பெற்றவரை இழந்திங்கு பெரும்பாவி ஆகிவிட்டோம்!

ஆற்றாது கண்ணீர் அழுது புலம்புகின்றோம்
ஓராண்டு மறைந்தாலும் பல நூறாண்டு போனாலும்
உங்கள் சிரித்தமுகம் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும்
மறக்க முடியவில்லை மலர் தூவி என்றும் உங்கள்
மலர்ப் பாதம் வணங்குகிறோம்!

உங்கள் ஆன்மா சாந்தி பெற்று இறைவனடி சேர
இறையருளை வேண்டுகின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விதுஷன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41798396779
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com