25ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குமரேசு நல்லம்மா (பெண் பரிசோதகர்- யாழ். போதனா வைத்தியசாலை)

தாய் மடியில் : 22, Jun 1931 — இறைவன் அடியில் : 11, Aug 1992வெளியீட்ட நாள் : 11, Aug 2017
பிறந்த இடம் - யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் - யாழ். சாவகச்சேரி

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமரேசு நல்லம்மா அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

பண்பான மனைவியானாய் பாசமுள்ள தாயானாய்
குடும்பத்தின் ஒளி விளக்கானாய்
குற்றம் பொறுக்கும் தெய்வமுமானாய்!

நீ நடந்து சென்றால் புல்லுக்கும் வலிக்காதென்பார்கள்
நீ போன பின்னாலே பிள்ளைகள் எங்கள் வலியை
யார் உனக்கு எடுத்துரைப்பார்கள்!

அந்நிய நாட்டில் அகதிகளாக நாமிருந்ததால்
புண்ணியவதியே உன் கடைசி முகம் காண
தகுதியற்றுப் போனோம் அம்மா!

ஆண்டு இருபத்தைந்து ஆனால் என்ன?
அடுத்த பிறவி பிறந்தால் கூட
எங்கள் அன்னை நீ தானம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!

உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகள் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781455995
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com