5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சாரதா கெளசலாநிதி

தாய் மடியில் : 22, Apr 1961 — இறைவன் அடியில் : 08, Oct 2012வெளியீட்ட நாள் : 09, Oct 2017
பிறந்த இடம் - முல்லைத்தீவு
வாழ்ந்த இடம் - இந்தியா

திதி : 12 ஒக்ரோபர் 2017

முல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரதா கெளசலாநிதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

பெற்றெடுத்துப் பெயர் சூட்டி
பேரழகாய்த் தாலாட்டி ஆலமரமாய் எமை தாங்கி
கற்றவராய் பெருமை மிக்க மானிடராய்
உருவாக்கிய எம் அன்னையே!

ஆண்டுகள் ஐந்து கடந்தாலும்
ஆறமுடியவில்லை அம்மா எம்மால்
உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம் அம்மா!

அம்மாச்சி என்று படம் பார்த்துச் சொல்லும்
அன்பான பேரப்பிள்ளைகளிற்கு என்ன
பதில் சொல்வோம் அம்மா!

மனம் ஆறாத் துயரோடு உங்கள்
நினைவோடு கண்களில் நீரோடு
வழி கடந்து செல்கின்றோம் அம்மா!

உன் மடியே சொர்க்கமம்மா
உலகில் வேறு சுகம் உள்ளதெல்லாம்
பொய் அம்மா இதை உணர்ந்தவர் வாழ்வில்
துன்பமது நெருங்காதம்மா

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உந்தன் முகம்
என்னாளும் உயிர் வாழும்

இதயம் எனும் பெட்டியிலே இறுக்கமாக
பூட்டி வைத்து உன் பாதம் பூசித்தே
நாம் வாழ்ந்திடுவோம்!

என்றும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டி நிற்கும்
பிள்ளைகள், மருமகன், பேரப்பிள்ளைகள்
தகவல்மகள், மகன்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com