5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வைரமுத்து சிவலிங்கநாதன்

தாய் மடியில் : 28, Feb 1948 — இறைவன் அடியில் : 05, Oct 2012வெளியீட்ட நாள் : 10, Oct 2017
பிறந்த இடம் - யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் - புங்குடுதீவு 5ம் வட்டாரம் , ஜெர்மனி Ratingen

திதி : 10 ஒக்ரோபர் 2017

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Ratingen ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து சிவலிங்கநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

பெருமையுடன் வாழ்ந்திருந்தார் சிவலிங்கநாதன்
பெருஞ்செல்வம் வந்ததுபோல் அன்றொருநாள்
திருவளர் நாயகியாம் தெய்வநாயகியை
திருமண பந்தமதில் கரம் பிடித்திருந்தார்

வருங்காலம் வளமுடனே செழித்தோங்கவும்
வரமாகவே ஐவருண்டு பிள்ளைகளாய்
உருவாகும் வசந்தங்கள் வருவதுபோல்
இலையுதிர்காலம் ஒவ்வொருவருக்கும் வருவதுண்டு

அக்காலம் அவருக்கன்று வந்தது போலும்
அவனியை விட்டே விடை பெற்றார் சிவலிங்கநாதன்
எக்காலமும் தாம்பூலம்தரித்த உதடுகளிலே
தவழ்ந்து வரும் புன்னகையில் கவர்ச்சியுண்டு!

முக்காலமும் உணர்ந்தவராய் உரையாடுவார்
முத்தமிழில் தேர்ச்சியுடன் நிறைந்திருந்தார்
எக்காலம் காண்போமினி சிவலிங்கநாதனை
எம்மை விட்டு நீண்ட தூரம் சென்றுவிட்டார்

ஐந்தாண்டுகள் உருண்டோடிச் சென்று விட்டாலும்
அவர் வதனம் கண்முன்னே நிழலாடுகின்றது!
சொந்த மண்ணிலும் பற்றுமிகு கொண்டிருந்தார்
சொந்தங்களையும் அரவணைத்து வாழ்ந்திருந்தார்

வந்த மண்ணிலும் பொதுப்பணியிலே இணைந்திருந்தார்
வருவோரையும் உபசரித்து மகிழ்ந்திருப்பார்
எந்த மண் நோக்கியவர் சென்றிருப்பார்
இறைவனின் திருவடிகளில் வாழ்ந்திருப்பார்
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com