3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சதீஸ்வரன் சபாரத்தினம் (நேதாஜி TELO)

தாய் மடியில் : 17, Apr 1971 — இறைவன் அடியில் : 12, Oct 2014வெளியீட்ட நாள் : 12, Oct 2017
பிறந்த இடம் - யாழ். சாவகச்சேரி
வாழ்ந்த இடம் - பிரான்ஸ்
யாழ். சாவகச்சேரி பெருங்குளம் சந்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த சதீஸ்வரன் சபாரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மாசற்ற தோழனே!
தன்னிகரில்லா தளபதியே
எண்ணில் அடங்கா நற்குணங்கள் அனைத்திற்கும்
ஏக நாயகனாய் திகழ்ந்தவனே

சத்தம் இல்லாமல் நித்தம் துடிக்க வைத்து விட்டு
மொத்தமாய் எம்மை மோசம் செய்ததேனோ?
கண்ணிமைக்கும் நேரத்தில் கவர்ந்து சென்ற
காலனவனின் கருணையற்ற செயலால்
கலங்குதையா எம் நெஞ்சம்

ஆண்டுகள் எத்தனை ஓடினாலும்
நாம் இப் பூவுலகில் வாழும் வரை
உம் நினைவுகள் எம்மை வாட்டுமையா

வேண்டும் வரம் எல்லாம் ஒன்றே
சென்ற இடத்தில் சீர் பெற்று
உன் ஆத்மா வாழ ஆண்டவன்
அருள் புரியட்டும்.
தகவல்கஜன், நாதன்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com