மரண அறிவித்தல்

திரு சின்னதுரை சற்குணம் (உரிமையாளர்- Colombo Stores, சுண்ணாகம்)

தாய் மடியில் : 05, Feb 1949 — இறைவன் அடியில் : 10, Jan 2018வெளியீட்ட நாள் : 11, Jan 2018
பிறந்த இடம் - யாழ். கந்தரோடை
வாழ்ந்த இடம் - கோப்பாய்
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை சற்குணம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை பார்வதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

முகுந்தன்(நிஷான்- La Chapelle, பிரான்ஸ்), கிருஷ்ணவேணி(பிரான்ஸ்), சைலஜா(கொழும்பு), நிசந்தன்(பிரான்ஸ்), தர்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், அமிர்தலிங்கம், மகாதேவன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாமூர்த்தி(பிரான்ஸ்), சுகந்தன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனுசன், மதுசன், அக்‌ஷயா(பிரான்ஸ்), ஆதிஷன், அக்‌ஷரன், இசான்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விவரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முகுந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33678292528
நிசந்தன் — பிரான்ஸ்

தொலைபேசி: +33668682306
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com