மரண அறிவித்தல்

திருமதி காசிப்பிள்ளை அன்னபூரணம் (சின்னம்மா)

தாய் மடியில் : 08, Oct 1931 — இறைவன் அடியில் : 31, Jan 2018வெளியீட்ட நாள் : 01, Feb 2018
பிறந்த இடம் - யாழ். மீசாலை
வாழ்ந்த இடம் - நுணாவில், டென்மார்க், கிளிநொச்சி

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், நுணாவில், டென்மார்க், கிளிநொச்சி இராமநாதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை அன்னபூரணம் அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

அன்னலட்சுமி(மணி- இலங்கை), இராமலிங்கம்(ராசா- பிரான்ஸ்), சாந்தநாயகி(தேவி- இலங்கை), வன்னியசிங்கம்(இலங்கை), மகேஸ்வரி(லலிதா- சுவிஸ்), சறோஜினி(றாதா- சுவிஸ்), சண்முகலிங்கம்(லிங்கம்- டென்மார்க்), இராஜேஸ்வரி(குட்டி- டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற பெரியதம்பி, தவமணி, சபாரத்தினம், சிவறஞ்சினி, பாலசுப்பிரமணியம், சந்திரகாந்தன், விஸ்வமதி, யோககுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சயந்தன், சுயந்தன், நிசந்தன், திலீபன், தினுஷா, அனுஷா, சறன்றாஜ், சறனியா, பிரவிந்தன், சகானா, சாறங்கி, பபிதா, அபிலாஸ், மிதுசன், மீறன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபர்னா, ஆருசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775756113
இராமலிங்கம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753688967
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com