மரண அறிவித்தல்

திருமதி நடராஜா மகேஷ்வரி (ராசு)

தாய் மடியில் : 17, May 1932 — இறைவன் அடியில் : 08, Mar 2018வெளியீட்ட நாள் : 12, Mar 2018
பிறந்த இடம் - யாழ். சுதுமலை வடக்கு
வாழ்ந்த இடம் - யாழ். சுதுமலை வடக்கு
யாழ். சுதுமலை வடக்கு ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராஜா மகேஷ்வரி அவர்கள் 08-03-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரலீலா(சந்திரா- சுதுமலை), ஜெயக்குமார்(வரதன்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ரத்தினபூபதி, ஜெகசோதி(பிரித்தானியா), காலஞ்சென்ற அப்பாபிள்ளை, தவமணி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஷ்ணபிள்ளை, அனுசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பூங்காவனம், புவனேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனகன், உஷாந்தினி, தர்ஷன், சஜித்தா, சங்கீதா, ஜெனுசெந்த், ராவுல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வரதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085612520
செல்லிடப்பேசி: +447886309578
கிருஷ்ணபிள்ளை — இலங்கை
தொலைபேசி: +94212255175
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com