மரண அறிவித்தல்

திருமதி நாகேஸ்வரி செல்வறட்ணம்

தாய் மடியில் : 12, Oct 1941 — இறைவன் அடியில் : 09, Mar 2018வெளியீட்ட நாள் : 12, Mar 2018
பிறந்த இடம் - யாழ். சங்கானை
வாழ்ந்த இடம் - சுன்னாகம் ஊரெழு , ஜெர்மனி Menden
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் ஊரெழு மேற்கை நிரந்தர வசிப்பிடமாகவும், ஜெர்மனி Menden ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி செல்வறட்ணம் அவர்கள் 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சண்முகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வறட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மசீலன்(ஜெர்மனி), வணிதா(லண்டன்), பத்மசோதி(ஜெர்மனி), செல்வசீலன்(ஜெர்மனி), காலஞ்சென்ற குமரசீலன், குணசீலன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், சிவபாக்கியம், கணேசரத்தினம், இராசலக்சுமி, ஆறுமுகப்பிள்ளை, இரத்தினபூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுபா(ஜெர்மனி), ஜெயக்குமார்(லண்டன்), விஜியேந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நேசம்மா, துரைசிங்கம், நவறட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரியங்கா, சகீனா, சாத்திரா, கபில், சஜிரா, சோபினா, சாருகா, சர்மிகா, கிருஸ்னா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சபிரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

பத்மசீலன் — ஜெர்மனி
தொலைபேசி: +4923731748005
செல்வசீலன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917655437450
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com