1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஞானசேகரம் ரதீஸ்வரன்

தாய் மடியில் : 26, Sep 1973 — இறைவன் அடியில் : 23, Feb 2017வெளியீட்ட நாள் : 12, Mar 2018
பிறந்த இடம் - யாழ். ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம் - லண்டன், பிரான்ஸ்
யாழ். ஆனைக்கோட்டை ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானசேகரம் ரதீஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பன்னிருமாதம் பரிதவித்தோமே!

என் ஆருயிர் கணவர் ரதீஸ்வரனே!
ஓராண்டு ஓடிமறைந்து போனதையா! - எங்கள்
ஓலம் மட்டும் இன்னும் ஓயவேயில்லை ஐயா!

என்னையும், உன் மூன்று பிள்ளைகளையும்
தவியாய் தவிக்கவிட்டு - 42 வயதினிலே
தனியாக நீர் பிரிந்து போனீரே !
மனம் வந்து போனீரா? - நான்
தாங்குவேன் என்று தப்புக்கணக்கு போட்டீரா?

என் அன்புத் தெய்வமே!
இங்கே - நான் படும் பாட்டை...
உன்னிடம் மட்டுமே சொல்லியழ முடியுமையா!

அப்பா எங்கே என பிள்ளைகள்
ஆயிரம் கேள்வி கேட்பதைச் சொல்வேனா ?
உற்றார் உதைக்கும் உதைக்கு கலங்குவேனா ?
இக் கொடிய நிலையை எனக்கிட்டுச் சென்றீரே!

பக்குவமாக நாம் வாழ்ந்து வந்தோமே! - கண்
பட்டது போல் நீர் போய் விட்டீர்!
பட்டுப் போனது எங்கள் வாழ்க்கை மட்டும் தானே!

என் தவிப்பு...! என் இழப்பு...! என் துயரம்...!
என் சோகம் கண்டு கலங்கி நீர்!
என் கனவில் வந்து நின்று!
ஏமாற்றி விடுவார்கள்! ஏமாற்றி விடுவார்கள்!
எழுந்து நில் ராஜினி !
எதுக்குமே அஞ்சாதே ! பிள்ளைகள் கவனமென்று!
என்னை நீர் தூக்கி நிறுத்தியதால்!
தன்னந்தனியாய் சுழன்று திரிகின்றேன்!

என்னருமை ரதீஸ்!
என் அருகில் என்றும் நீர் இருந்து!
என்னை வழி நடத்த வேண்டுமையா!

ஒரு வருடம் மின்னல் வேகத்தில் ஓடி விட்டது!
ஒற்றை மகனென்று கைக்குள் வைத்து!
பார்த்துப் பார்த்து வளர்த்த உமது மகன்
உமது ஆத்மா விடை பெற்று சென்ற
அதே நாளில்! அதே திதியில்! அதே நேரத்தில்!
உமக்கு ஓராண்டுக் கடமையைச் செய்து முடிப்பான்!
உமது ஆத்மா பரமபதம் அடைந்து!
வாழ் நாளெல்லாம் எம்மை காத்து நிற்க
இறைவனை நாம் இறைஞ்சுகின்றோம்!

உம்மை இழந்து தவிக்கும்
மனைவி, பிள்ளைகள்.

அன்னாரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 13-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 17-03-2018 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிதொடக்கம் பி.ப. 05:00 மணிவரை Pillaiyar Kovil, 90 Rue Emile Zola, 93120 La Courneuve, France எனும் முகவரியில் நடைபெறுகின்ற மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com