1000

யாழில் நேற்று இரவு இரண்டு வயது பெண் குழந்தை மாயம்! கதறும் தாய்

யாழில் நேற்று இரவு இரண்டு வயது பெண் குழந்தை மாயம்! கதறும் தாய்

யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்று இரவு 2 வயது குழந்தை ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இதில் ஆர்கலி என்ற 2 வயது குழந்தையே கடத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கடத்தப்பட்ட குழந்தையின் தாயார் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று இரவு குழந்தை உணவருந்திக்கொண்டு இருந்ததாகவும், அப்போது மின்சாரம் தடைப்பட்ட நிலையில் குழந்தையின் அழுகுரல் கேட்டு தாய் ஓடி வந்துள்ளார்.

இதன்போது குழந்தையை காணவில்லை எனவும், சிலர் மதிலால் கடந்து சென்றதை பார்த்ததாகவும் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

குழந்தையின் தாயும், தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்த கடத்தலில் தந்தையின் தரப்பினர் தொடர்பு பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுவதாகவும் தாயார் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II