1000

சீனாவுடன் தொடரும் மோதல் போக்கு- விமான பறப்புக்கு தடைவிதித்தார் ட்ரம்ப்

சீனாவுடன் தொடரும் மோதல் போக்கு- விமான பறப்புக்கு தடைவிதித்தார் ட்ரம்ப்

சீன நாட்டு விமான நிறுவனங்களை ஜூன் 16ம் திகதி முதல் அமெரிக்காவில் பறக்க தடைவிதித்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் சீனாவின் விமான ஒழுங்குமுறை ஆணையம் வெளிநாடுகளிலிருந்து இயக்கக்கூடிய விமானங்களுக்கான கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி, வாரத்துக்கு ஒரு வெளிநாட்டு விமானம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற முடிவை எடுத்தது.

இதற்கிடையே, அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை தொடங்க சீனாவிடம் அனுமதி கோரின. ஆனால் அதை சீனா கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, 1980-ம் ஆண்டு விமான போக்குவரத்து ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில், ஜூன் 16-ம் திகதி முதல் சீன நாட்டு விமானங்களை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதில்லை. அதேபோல், இங்கிருந்து சீனா செல்வதற்கும் அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என அதிரடியாக அறிவித்துள்ளது.

தங்கள் நாட்டு விமான நிறுவனங்கள் மீதான தடையை நீக்காததால் அதிருப்தி அடைந்த அதிபர் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.


ஆசிரியர் - Editor II