1000

ஸ்ரீலங்காவில் வணக்கஸ்தலங்களை மீண்டும் திறப்பதில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

ஸ்ரீலங்காவில் வணக்கஸ்தலங்களை மீண்டும் திறப்பதில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சகல வணக்கஸ்தலங்களிலும் வழிபாடுகள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்ததீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலையடுத்த இந்த நடைமுறை ஒரு வார காலம் பின்போடப்பட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி முதலே மத வழிபாடுகளுக்கு அனுமதி உள்ளதாக வக்பு சபை தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.

பள்ளிவாசல்கள் திறக்கப்பட்ட பின்னர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை வக்புசபை சகல பள்ளிவாசல்களுக்கும் அனுப்பியுள்ளதாக கூறிய அவர், அவற்றை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

சுகாதாரத் துறை மற்றும் அல்லது பாதுகாப்புத் துறையினாரால் இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்ற போது இலங்கை வக்ப் சபை மேலதிக பணிப்புரைகளை வழங்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II