1000

கனடாவிலிருந்து ஸ்ரீலங்கா சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்

கனடாவிலிருந்து ஸ்ரீலங்கா சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்

கனடாவில் இருந்து ஸ்ரீலங்கா சென்ற பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

காலி, களுவெல்ல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு கனடாவிலிருந்து குறித்த பெண் வந்துள்ளார்.

இதன்போது, புகைப்படம் எடுக்க வந்த கனேடிய பெண்ணுக்கு புகைப்படம் எடுக்க உதவுவது போன்று நடித்து அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த பெண் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடமும் கனேடிய உயர் ஸ்தானிகராலயத்திலும் முறைபாடு செய்துள்ளார்.

அவரிடம் இருந்த புகைப்படம் ஊடாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அக்மீமன பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் - Editor II