1000

கொரோனா நோயாளிகளுக்கு மரணத்தை அதிகரிக்கும் மருந்து ! மீண்டும் அனுமதி வழங்கிய உலக சுகாதார அமைப்பு

கொரோனா நோயாளிகளுக்கு மரணத்தை அதிகரிக்கும் மருந்து ! மீண்டும் அனுமதி வழங்கிய உலக சுகாதார அமைப்பு

மலேரியா நோய்க்கு பயன்படுத்தும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்தை, கொரோனாவுக்கு எதிரான மருத்துவ பரிசோதனை செய்ய மீண்டும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது

கொரோனா நோயாளிகளிடையே இந்த மருந்து இறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும் என்று தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கைக்கு பிறகு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனையை உலக சுகாதார நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பல பிரபலங்கள் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் செயல்படுவதாக ஆணித்தரமாக கூறி வந்தனர்.

ஆசிரியர் - Editor II