லண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்

லண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்

வல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார்.  இவர் ஊபர் டாக்ஸ்சி ஓடி வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக , கடும் காச்சல் இவருக்கு இருந்துள்ளது. இருப்பினும் ஆரம்ப கட்டத்தில் இவரை வைத்தியசாலையில் சேர்க்க, வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துவிட்டது. பின்னர் நிலமை மோசமாகச் சென்ற பின்னரே அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். ஆனால் அது மிகவும் காலம் தாழ்த்தி நடந்துள்ளதால்.

அவர் இறந்துவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள். மெய்குட்டி என்று எல்லோரும் அன்பாக அவரை அழைப்பார்கள். மிகவும் நல்ல மனிதர் என்றும். சில வருடங்களுக்கு முன்னர் அவர் சீட்டுக் கட்டி வந்த நிலையில்.

சிலர் முதல் சீட்டை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்கள். இதனால் எவரும் தன்னை ஏமாற்று காரன் என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவே, இரவு பகலாக டாக்ஸி ஓடி. பணம் சம்பாதித்து. உழைத்த காசை  ஏனைய சீட்டு பிடித்த நபர்களுக்கு செலுத்தி வந்துள்ளார்.

இதனால் கொரோனா தாக்கம் லண்டனில் இருந்தும் கூட இவர் வேலை செய்வதை நிறுத்தவில்லை. இவரது டாக்ஸிசியில் ஏறிய நபர் ஒருவர் கொரோனாவை மெய்குட்டிக்கு கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது ஆத்ம சாந்திக்கு அதிர்வு இணையமும் பிரார்த்திக்கிறது. மக்களே மிக மிக ஜாக்கிரதை. மற்றுமொரு முள்ளிவாய்க்கால் நிலை எமக்கு வேண்டாம்.

ஆசிரியர் - Editor II