சுவிஸில் துப்பாக்கி சூடு நடத்த திட்டமிட்ட மாணவன் கைது

சுவிஸில் துப்பாக்கி சூடு நடத்த திட்டமிட்ட மாணவன் கைது

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் உள்ள பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்த திட்டமிட்ட மாணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Bellinzonaவை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க மாணவர் ஒருவர் பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்த திட்டமிட்டதாக பொலிசுக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று குறித்த மாணவனை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணையை நடத்தியுள்ளனர்.அவனது வீட்டை சோதனையிட்டதில் துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

மாணவர்களையும், ஆசிரியர்களையும் அடிக்கடி மாணவன் அச்சுறுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டது..எனினும் துப்பாக்கியின் ரகம் குறித்தோ, மாணவனின் திட்டம் குறித்தோ தகவல்கள் எதையும் பொலிசார் வெளியிடவில்லை

ஆசிரியர் - Sellakumar