ஜேர்மனியில் கொவிட்-19 உயிரிழப்பு குறைந்தது- தொற்று வீதம் அதிகரித்தது!

ஜேர்மனியில் கொவிட்-19 உயிரிழப்பு குறைந்தது- தொற்று வீதம் அதிகரித்தது!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாக குறைவடைந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 248பேர் பாதிப்படைந்ததோடு, 3பேர் உயிழந்துள்ளனர்.

எனினும், கொவிட்-19 வைரஸ் பரவும் தொற்று வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயின் பரவலுக்கான திறனை அளவிடும் ஜேர்மனியின் 7 நாள் வைரஸ் இனப்பெருக்கம் வீதம் ஞாயிற்றுக்கிழமை 1 முதல் 1.09 வரையிலான முக்கியமான மதிப்பை விட உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கள்கிழமை) முதல் ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு ஜேர்மனி தனது நில எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னதாக இந்த செய்தி வெளிவந்துள்ளது.

இதனிடையே ஜேர்மனி தேவாலயத்தில் 100இற்க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தொற்று பரவல், ஜூன் தொடக்கத்தில் நடந்த பெந்தெகொஸ்தே சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 187,671ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,870ஆக உள்ளது. 6,601பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 172,200பேர் குணமடைந்துள்ளனர். 447பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஆசிரியர் - Editor II