1000

சுவிஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் கத்திக்குத்துக் காயங்களுடன் இறந்து கிடந்த பெண்!

சுவிஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் கத்திக்குத்துக் காயங்களுடன் இறந்து கிடந்த பெண்!

சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண் ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் இறந்துகிடந்ததையடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Lucerne மாகாணத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்துவந்தவர் கிறிஸ்டினா (47).

ஞாயிறு மதியம் கிறிஸ்டினா அவரது வீட்டில் இறந்து கிடந்ததை பொலிசார் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

முதியோர் இல்லம் ஒன்றில் நீண்ட காலமாக வேலை செய்துவந்த கிறிஸ்டினா, முதியோர்களிடையே மிக பிரபலமானவர் என அந்த முதியோர் இல்ல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டினா கொலை தொடர்பாக பொலிசார் அவரது கணவரை கைது செய்துள்ளனர். அந்த 49 வயது நபர் தற்போது காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II