1000

எங்கள் மாஸ்குகள் கொரோனா வைரஸை தடுப்பது மட்டுமல்ல கொல்ல கூடிய தன்மையுடையவை – சுவிஸ் நிறுவனம் அறிவிப்பு

எங்கள் மாஸ்குகள் கொரோனா வைரஸை தடுப்பது மட்டுமல்ல கொல்ல கூடிய தன்மையுடையவை – சுவிஸ் நிறுவனம் அறிவிப்பு

சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்று, துணிகளை கிருமிநீக்கம் செய்ய பயன்படுத்தப்படும் தங்கள் தொழில்நுட்பம் கொரோனா வைரஸையும் கொல்வதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சஞ்சீவ் சுவாமி என்பவருக்கு சொந்தமான அந்த நிறுவனம், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாஸ்குகளை செய்யும் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் Zug நகரில் அமைந்துள்ள Livinguard Technology என்ற அந்த நிறுவனம்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம், மாஸ்க் செய்யப்பட்ட துணியின் மேற்பரப்பில் ஒரு நேர்மறை மின்னோட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம் இயங்குகிறது.

ஆக, கிருமிகள் இந்த மாஸ்கின் மேற்பரப்பைத் தொடும்போது. கிருமிகளின் செல் எதிர்மறை மின்னோட்டம் கொண்டதால், அவை அழிக்கப்படுகின்றன.

இந்த தொழில்நுட்பம், இந்த மாஸ்குகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும் உகந்ததாக்குகிறது.

210 முறை இந்த மாஸ்குகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம், அவற்றை துவைத்தும் மீண்டும் பயன்படுத்தலாம் என்கிறார் சஞ்சீவ்.

ஆசிரியர் - Editor II