1000

சுவிட்சர்லாந்தில் பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை!

சுவிட்சர்லாந்தில் பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை!

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் 56 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


குறித்த இளம்பெண் காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

பாஸல் மண்டலத்தில் Pratteln பகுதியில் சனிக்கிழமை நண்பகல் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

24 வயதேயான அந்த இளம்பெண்ணின் அலறல் சத்தத்தை அப்பகுதி மக்களில் பலரும் கேட்டுள்ளனர்.

இதனிடையே குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த அவசர அழைப்பின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் தரப்பு சம்பவப்பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுடன், 56 வயது சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

அந்த இளம்பெண்ணுடன் இவர் கடந்த ஒரு வார காலமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததை அப்பகுதி மக்கள் பலரும் நினைவு கூர்ந்துள்ளனர்.

இருப்பினும், அந்த 56 வயது நபருக்கும் குறித்த இளம்பெண்ணிற்கும் என்ன உறவு என்பது தொடர்பில் எந்த தகவலும் தங்களுக்கு தெரியாது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்,.

சிலர், அந்த இளம்பெண் மருமகளாக இருக்கலாம் எனவும், கணவர் விவாகரத்து கோரியது தொடர்பில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் விரிவான விசாரணைக்கு பின்னரே முழுமையான தகவல் வெளிவரும் என கூறப்படுகிறது.

ஆசிரியர் - Editor II