வன்கூவரின் பிரபலமான கோடைகால இடங்கள் சில மீண்டும் திறப்பு!

வன்கூவரின் பிரபலமான கோடைகால இடங்கள் சில மீண்டும் திறப்பு!

கொவிட்-19 முடக்கநிலை காரணமாக பல மாதங்கள் மூடப்பட்ட பின்னர், வன்கூவரின் பிரபலமான கோடைகால இடங்கள் சில மீண்டும் திறக்கப்படுகின்றன.

வன்கூவரின் பூங்காவுக்கான சபை, கோடைக்கால பார்வையாளர்கள் எங்கு, எப்போது மீண்டும் விளையாடலாம் என்பது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி முதல் நகரம் முழுவதும் 10 spray பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும்.

எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதிக்குள், நான்கு பொது நீச்சல் தடாகங்கள், நீச்சல் வீரர்களுக்கு மீண்டும் திறக்கப்படும்.

மேலும், ஒன்பது நகர கடற்கரைகள் நியமிக்கப்பட்ட உயிர்காக்கும் படையினருடன், நீச்சல் பகுதிகளை மேற்பார்வையிட அனுமதிக்கும்.

ஒவ்வொரு நீச்சல் தொகுதியும் 30 நிமிட மூடல் மூலம் சுத்தப்படுத்தப்பட்டு அடுத்த குழுவிற்கு தயாராகுவதற்கு அனுமதிக்கும்.

ஆசிரியர் - Editor II