அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஜோடி

அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஜோடி
தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தால், அவமானமாகிவிடும் என்று தென்னந்தோப்பில் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த வடுகபட்டியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.

வழக்கம் போல் தென்னந்தோப்புக்கு சென்ற அவர், தோட்டத்தின் மோட்டார் அறையில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், பெண் ஒருவர் தரையிலும் சடலமாக கிடந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், தற்கொலை செய்து கொண்ட ஜோடியின் பெயர் சங்கனமுத்து-தேவி என்பது தெரியவந்துள்ளது.பெரியகுளம் அருகே வடுகப்பட்டி சேடப்பட்டியை சேர்ந்தவர் சங்கனமுத்து. இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி அப்பகுதியில் உள்ள கார் ஷோரூம்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார்.

அதே கம்பெனியில் திண்டுக்கல் சின்னாள்பட்டியைச் சேர்ந்த தேவி(32) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளனர். முதலில் நண்பர்களாக இருந்த இவர்களின் நட்பு நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனால் இருவரும் பல்வேறு இடங்களுக்கு காதல் ஜோடியினர் தனிமையில் சென்றுள்னனர். இந்த விவகாரம் கம்பெனி உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு தெரிய வந்ததால், இருவரையும் உரிமையாளர் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த இந்த ஜோடி பெரியகுளம் அருகே வடுகபட்டி- தாமரைக்குளம் சாலையில் உள்ள தென்னந் தோப்பிற்கு சென்றுள்ளனர்.

அதன் பின் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானம் அடைந்த இரண்டுபேரும் தோப்பில் இருந்த மோட்டார் ரூம்பில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
ஆசிரியர் - Editor