கர்நாடகாவில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாஜக

கர்நாடகாவில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாஜக

கர்நாடகா தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னிலை வகிக்கிறது.

கர்நாடகாவில் மே 12-ந் திகதி 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவில் 72.13% வாக்குகள் பதிவாகி இருந்தன.

தற்போதைய நிலவரப்படி பாரதீய ஜனதா 115-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இங்கு ஆட்சி அமைக்கும். தற்போது தேவையான 113 க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. மீண்டும் கர்நாடகா முதலமைச்சராகிறார் எடியூரப்பா.

இரண்டாம் இணைப்பு

பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்

றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் கர்நாடகாவை தங்கள் வசப்படுத்தி கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால், அது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கர்நாடகாவை தவிர்த்து வெறும் 3 பிற மாநிலங்களை மட்டுமே தற்போது காங்கிரஸ் ஆள்கிறது.

இந்தியாவில் மொத்தம் உள்ள 29 மாநிலங்களில், 22 மாநிலங்களை பா.ஜ.கவே ஆள்கிறது. பா.ஜ.க வுக்கும் இது முக்கியத் தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. கர்நாடகவில் இதுவரை ஒருமுறை மட்டுமே வெற்றிப் பெற்றுள்ள பா.ஜ.கவுக்கு தென் இந்தியாவில் பெரிய இருப்பு இல்லை.

முதலாம் இணைப்பு

இந்த வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது.

க்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. இருப்பினும் அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சித்தராமையா பின்னடைவில் இருந்தார்.

பின்னர் அடுத்த சுற்றில் முன்னிலைக்கு வந்தார்முன்னிலையில் உள்ள நிலவரங்களில் படி, காங்கிரஸ் 60 தொகுதிகளை நெருங்கும் போது பாஜகவும் 60 தொகுதிகளை நெருங்கியது.

பின்னர் சட்டென முன்னிலை எண்ணிக்கையில் உயர்ந்த பாஜக 78 தொகுதிகளில் முன்னிலைக்கு வந்தது. காங்கிரஸ் 67 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

இதற்கிடையே மஜத 24 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

ஆசிரியர் - Editor