கூட்டு பலாத்காரத்திற்கு இரையான சிறுமி

கூட்டு பலாத்காரத்திற்கு இரையான சிறுமி

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு விடுதியில் 12 வயது சிறுமி 3 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் 3 நபர்கள் சேர்ந்து 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு டெல்லி செல்லும் ரயிலில் சிறுமியை விட்டுச் சென்றுள்ளனர்.

டெல்லி காவல்துறையினர் சிறுமியை மீட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், குற்றவாளிகளில் இருவர் அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது குற்றவாளியை கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், குற்றவாளிகள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இதைத்தடுப்பதற்காக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கிலிடும் புதிய சட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor