விஜயை அப்படி கூப்பிட கஷ்டமாக இருந்தது - பிரபல நடிகை

விஜயை அப்படி கூப்பிட கஷ்டமாக இருந்தது - பிரபல நடிகை

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் முதல் முதலாக நடித்திருந்த படம் தெறி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முன்னணி நடிகையான சமந்தா நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகை சுனைனாவும் நடித்திருந்தார். இவர் தற்போது விஜய் ஆன்டனியுடன் சேர்ந்து காளி என்ற படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயுடன் தெறி படத்தில் நடித்திருந்தது குறித்து கேட்கப்பட்டுள்ளது, அதற்கு பதிலளித்த சுனைனா அது என்னால் மறக்க முடியாத நிகழ்வுகள் என கூறியுள்ளார்.

ஆனாலும் விஜயை அண்ணா என்று கூப்பிடுவது தான் கஷ்டமாக இருந்தது என கூறியுள்ளார். அட்லீ மற்றும் விஜயுடன் பணி புரிந்தது எல்லாம் மறக்க முடியாத தருணம் எனவும் கூறியுள்ளார்.

ஆசிரியர் - Editor