ஷூட்டிங்கில் இணைந்த கீர்த்தி, பாராட்டிய விஜய்

ஷூட்டிங்கில் இணைந்த கீர்த்தி, பாராட்டிய விஜய்

தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 என்ற படத்தில் நடித்து வருகிறார். கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து இவர்கள் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

அதேபோல் கீர்த்தி சுரேஷ் பைரவா படத்திற்கு பிறகு மீண்டும் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தற்போது இந்த படத்தின் நடன காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைத்து வரும் இந்த படத்தில் தற்போது கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார். மகாநதி படத்தில் சிறப்பாக நடித்ததால் விஜய் கீர்த்தியை பாராட்டியுள்ளார். இதனால் கீர்த்தி சுரேஷ் உற்சாகமடைந்துள்ளார்.

ஆசிரியர் - Editor