கிளாமரில் இறங்கும் வருத்தப்படாத நாயகி

கிளாமரில் இறங்கும் வருத்தப்படாத நாயகி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தவர் ஸ்ரீ திவ்யா.

இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

இந்த நிலையில் இவர் அதர்வாவுடன் சேர்ந்து ஒத்தைக்கு ஒத்த என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதுவரை என்னுடைய உடல் வாகுக்கு கிளாமர் செட்டாகாது என கூறி வந்த ஸ்ரீ திவ்யா மார்க்கெட்டை ஏற்றி கொள்ள கிளாமராக நடிக்கவும் தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கிளாமர் ரோல்கள் அவருக்கு விட்ட இடத்தை பிடிக்க உதவுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆசிரியர் - Editor