பாஜகவை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்

பாஜகவை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், பாஜக கட்சியை விட காங்கிரஸ் கட்சி அதிக வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 222 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் 72.13 சதவித வாக்குகள் பதிவாகின, இதனைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணும் பணி துவங்கியது.

ஆரம்ப கட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளுக்கு இடையே சமஅளவில் போட்டி நிலவியது. ஆனால், அதன் பின்னர் பாஜக முன்னிலை பெற்றது.

தற்போது வரை பாஜக கட்சி 110 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளிலும், மதச் சார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், வாக்கு சதவிதத்தில் காங்கிரஸ் கட்சி, பாஜக-வை பின்னுக்கு தள்ளியுள்ளது.

அதாவது, பா.ஜ.க 36.7 சதவித வாக்குகளை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் 38 சதவித வாக்குகளை பெற்றுள்ளது. மேலும், மதசார்பற்ற ஜனதா தளம் 17.7 சதவித வாக்குகளை பெற்றுள்ளது.

வாக்கு சதவிதம் என்பது 222 தொகுதிகளில் எந்தெந்த கட்சிகளுக்கு, எவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளது என்பதைக் கொண்டு கணக்கீடு செய்யப்படும். அதன்படி பார்க்கும் போது காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

சில தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக-வை விட முன்னிலை வகிக்கிறது, பல தொகுதிகளில் காங்கிரஸ் பெற்ற வாக்குகளை விட மிகக் குறைவான அளவு வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது, இதுவே வாக்கு சதவிதத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு காரணமாக உள்ளதாம்.

ஆசிரியர் - Editor