239 பேருடன் மாயமான MH370

239 பேருடன் மாயமான MH370

2014 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து பீஜிங் புறப்பட்ட MH370 விமானம் ஒன்று இந்தியப் பெருங்கடல் பகுதியில் மாயமானது.

விமானம் காணாமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில் விமானத்தை ஓட்டிய பைலட்டிற்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்ததால் அவர் விமானத்தை வேண்டுமென்றே கடலில் விழச்செய்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற கருத்தே மேலோங்கியது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள சில தகவல்கள் வேறொரு கருத்தை முன்வைக்கின்றன.

அதாவது விமானம் மாயமான சமயத்தில் சீன தீவிரவாத அமைப்பு ஒன்று விமானம் காணாமல் போனதற்கு தாங்கள்தான் பொறுப்பு என்று கூறியிருந்தது.

சீன பத்திரிகையாளர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு இ -மெயிலில், எங்களில் ஒருவரை நீங்கள் கொன்றால் பதிலுக்கு பழிக்குபழியாக உங்களில் நாங்கள் நூறு பேரைக் கொல்வோம் என்று அந்த அமைப்பு கூறியிருந்தது.

ஆனால் அது எப்படி விமானம் காணாமல் போனது என்பது குறித்த விவரங்களை அளிக்காததால் அது ஒரு புரளி என்று மலேசிய அதிகாரிகள் ஒதுக்கி விட்டனர்.

என்றாலும் அவர்கள் ஈரானைச் சேர்ந்த இரண்டு பயணிகள் போலி பாஸ்போர்ட்டில் பயணித்ததை ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் Google Earthஇல் மாயமான விமானத்தின் பாகங்களைப்போன்ற சில பொருட்களை அவர் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த பாகங்கள் குண்டுகளால் துளைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் விசாரணை அதிகாரிகள் அதை வெளியுலகுக்கு தெரியாமல் மறைக்க முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அந்த விமானத்தில் தொலைவிலிருந்து விமானத்தை கட்டுப்படுத்தும் ஒரு கருவி இணைக்கப்பட்டிருந்ததாகவும், அதை யாரோ வெளியிலிருந்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆசிரியர் - Editor