1000

மகிந்த விடுதலை செய்த ஒரே ஒரு தமிழன் யார் தெரியுமா?

மகிந்த விடுதலை செய்த ஒரே ஒரு தமிழன் யார் தெரியுமா?

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும் பல தகவல்கள் தொடர்பில் கூறுகின்றார்.

1979ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் என்ற அரசியல் கைதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதலாவது வழக்கான நீர்வேலி வங்கிக் கொள்ளை இரட்டைக் கொலை வழக்கிலிருந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கு வரை கடந்த 40 ஆண்டுகளாக பல நூற்றுக்கணக்காண அரசியல் கைதிகளுக்காக வாதாடிவரும் வாதாடிவருபவருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவிடம் அரசியல் கைதிகளின் விடுதலையில் தற்கால நிலைபற்றிய ஒரு நேர்காணல்

கேள்வி : 2020ம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி அரசியல் கைதிகளின்விடுதலை தொடர்பான விபரங்களை ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தாவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம். ஏ.சுமந்திரனும் பிரதமர் மகிந்த ராஜபக்ச விடம் கையளித்துள்ளனர். இதனால் அரசியல் கைதிகள் பொதுத் தேர்தலுக்கு முன்னர் விடுதலையாகும் சாத்தியமுண்டென எண்ணுகிறீர்களா?

பதில் : அரசியல் விவகாரங்களில் முக்கியமான ஒன்று, சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாமிலும் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் பற்றிய விடயமாகும். இவ்விடயத்தில் தோ்தல்கள் வரும் பொழுது தேசிய கட்சிகள் பலவாக்குறுதிகளை வழங்குவதும் தேர்தலின் மூலம் பதவிக்கு வந்தபின்னர் அப்படிக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் கிடப்பில் போடுவதும் வழமையான செயல்பாடுகளே . அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்திலும் மாறி மாறி ஆட்சிக்குவந்த அரசுகள் இதனையே செய்தன.

பயங்கரவாத, அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாமிலும் நீண்ட காலங்களாக வாடும்அரசியல் கைதிகளின் விடயங்களைப் பொறுத்தவரை அவ்விவகாரம் தேர்தல் காலங்களில் அரசியலாக்கப்படுகின்றதே தவிர,அதில் சட்டம் தனது கடமையைச் செய்வதாகத் தெரியவில்லை

இந்தக் கைதிகளுக்கு எதிராக தேவையற்ற கால தாமதம் செய்யாமல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்கில் கைதிகள் குற்றவாளியாகக்காணப்பட்டு கைதிகளுக்கு அதி உச்ச தண்டணை வழங்கப்பட்டிருந்தால் கூட தண்டனைக் காலம் முடிவுற்று கைதிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலை ஆகியிருப்பர் என்பதுடன் பேச்சுவார்த்தையும் அவசியமற்றதாயிருக்கும். ஆனால் இந்தக்கைதிகளின் விடயத்தில் வேண்டுமென்றே காட்டப்படும் நீண்டகால தாமதத்துக்கு அரசியல் தலைமைத்துவங்களின் இலக்கு வைக்கப்பட்ட நோக்கங்களா அல்லது இக் கைதிகள் தமிழர்கள்என்பதாலா? என்ற நியாயமான கேள்வி எழுகின்றது.

இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் 2020 ஆம்ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான விடயங்கள் டக்ளஸ் தேவானந்தாவினாலும், தமிழ் தேசியகூட்டமைப்பின் பேச்சாளராலும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டநிலையில், தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதோ அல்லது பேச்சுவார்தை நடத்தி தற்பொழுது சிறையிலும் தடுப்புக்காவலிலும் தடுத்தும் அடைத்தும் வைக்கப்பட்டிருக்கும் தண்டனை விதிக்கப்பட்ட, வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும், மற்றும் விளக்கமறியல் கைதிகள் என சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதையோ எதிர்பார்க்க முடியாது.

அவ்வாறில்லாமல் விதிவிலக்காக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்களாயின் வழமை போலவழக்குத் தாக்கல் செய்ய எந்த வித சான்றுகளும் இல்லாத விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சில கைதிகளும் மேல் நீதி மன்றில்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் அரசியல் கைதிகளில் சட்டமா அதிபரினால் கைதிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய சான்றுகள் இல்லாத சிலகைதிகளின் வழக்குக்களையும் நீதிமன்ற விசாரணையிலிருந்து மீளப்பெற்று ஒரு சில கைதிகள் மட்டுமே விடுதலை செய்யப்படுவர் .

கேள்வி: தற்பொழுது சிறைச்சாலையில் எத்தனை அரசியல்கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்? இந்த அரசியல் கைதிகள் எத்தனை ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்?

பதில்: சிறைச்சாலைகளில் 90 அரசியல் கைதிகளும் மகர தடுப்புமுகாமில் ஒரு அரசியல் கைதியுமாக மொத்தம் 91 கைதிகள் அடைத்தும் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளதுடன் 1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 11 ஆண்டு தொடக்கம் 12, 13,17, 20, 24, 24, ஆண்டுகள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி: 91 அரசியல் கைதிகளில் எத்தனை கைதிகள் வழக்கு விசாரணைகள் முடிவடைந்து தண்டனையை அனுபவிப்பவர்கள்?

பதில்: மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் முடிவடைந்து தண்டனை அனுபவிப்பவர்கள் மொத்தம் 46 கைதிகள். இவர்களில் மேன்முறையீட்டு நீதிமன்றிலும் உயர்நீதிமன்றிலும் மேன்முறையீடு செய்த 29 கைதிகளின் மேன்முறையீடுகளின் இறுதித் தீர்ப்புக்கள்மேல் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்களை ஒப்புறுதிப்படுத்தி அரசியல் கைதிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. மிகுதி 17 கைதிகளினதும் மேன்முறையீடுகள் விசாரணையில் உள்ளன.

கேள்வி: 91அரசியல் கைதிகளில் தண்டனை வழங்கப்பட்ட 46 கைதிகளுக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்படுள்ளன?

பதில் : 2 கைதிகளுக்கு மரணதண்டனை, ஒரு கைதிக்கு இரட்டை மரணதண்டனை, 12 கைதிகளுக்கு ஆயுள் தண்டனை, உட்பட 10 வருடத்திலிருந்து 20, 30,60,,200 வருடங்களிலிருந்து 600 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: தற்பொழுது தடுத்தும் அடைத்தும் வைக்கப்பட்டிருக்கும் 91 கைதிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டக்கள் பாரதூரமான குற்றச்சாட்டுக்களா?

ஆசிரியர் - Editor II