1000

சென்னை இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்! மகனுக்கு விசம் கொடுத்து தாய் தற்கொலை

சென்னை இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்! மகனுக்கு விசம் கொடுத்து தாய் தற்கொலை

சென்னை மடிபாக்கத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் பெற்ற மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

சிவக்குமார் மற்றும் ஆனந்தி தம்பதினர் இருவருக்கும் திருமணமாகி ஒன்றாக வசித்து வந்த நிலையில், இருவருக்கும் ஒரு மகன் இருந்துள்ளான்.

ட்ரைவராக வேலை பார்க்கும் சிவக்குமார்க்கும் தனியார் தொழில் நுட்பத்தில் வேலை பார்க்கும் ஆனந்திக்கு அடிக்கடி கருத்து வேறுபாட்டின் காரணமாக சண்டை வருவது வழக்கம். இந்நிலையில், ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாக மனைவி கணவனை விட்டு தனியாக மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பிரிவு ஒரு புறம், கொரோனா ஒருபுறம் இருக்க தனிமையின் காரணமாக குறித்த பெண் மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் - Editor II