1000

கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் மலேரியா அபாயம்?

கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் மலேரியா அபாயம்?

தம்புள்ள பெல்வஹெர பிரதேசத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் இருந்த ஒருவருக்கு மலேரியா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து அவர் தற்போது தம்புள்ளை பொது வைத்தியசாலையின் விஷேட சிகிச்சை அறையில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த நபர் மடகஸ்காரில் இருந்து வந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, நேற்று பகிஸ்தானில் இருந்து வந்த3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிபிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II