பிரான்ஸில் முன்னாள் பிரதமருக்கும் அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்டது சிறை..காரணம் ?

பிரான்ஸில் முன்னாள் பிரதமருக்கும் அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்டது சிறை..காரணம் ?

2017 இல் பிரான்ஸில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஆட்சிபீடத்தை பிடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் பிரான்கோய்ஸ் பில்லன் (Francois Fillon) மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாரிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை பில்லனின் நாடாளுமன்ற உதவியாளராக அவரது மனைவி பணி புரிந்ததாக போலியாக கணக்கு காட்டப்பட்டதாகவும், அதன் மூலம் சுமார் 8 கோடி ரூபாய்க்கு மேல் அரசுப் பணம் அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய பாரிஸ் நீதிமன்றம், இருவருக்கும் சிறைத் தண்டனையும், மூன்று கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.

மேலும் சம்பளமாகப் பெற்ற 8 கோடி ரூபாயையும் அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும் என்றும்

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பில்லன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் நிலவியது. ஆனால் இந்த மோசடி குறித்த தகவல் வெளியானதால் இமானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றமைகுறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II