வெளியானது +2 பொதுத்தேர்வு முடிவுகள்

வெளியானது +2 பொதுத்தேர்வு முடிவுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1% குறைந்துள்ளது.

ஆசிரியர் - Editor