தென் கொரியாவுக்கு படையெடுக்கும் வடகொரிய தலைவர்கள்

தென் கொரியாவுக்கு படையெடுக்கும் வடகொரிய தலைவர்கள்

கொரிய தீபகற்பத்தின் ஒற்றுமை, அமைதி மற்றும் வளத்திற்கான பன்முன்ஜோம் பிரகடனம் குறித்து ஆலோசிக்க மே 16 ஆம் திகதி உயர்மட்ட கூட்டத்தை நடத்த உள்ளதாக தென் கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த மாதம் ஏற்பட்ட இரு கொரிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட சமாதானத்தை அடுத்து இந்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் பன்முன்ஜோம் பிரகடனம் குறித்தான ஒப்பந்தங்கள் மற்றும் அதனை அமல்படுத்தும் திட்டம் குறித்து இரண்டு நாடுகளும் ஆலோசிக்க உள்ளன.

இந்த உயர்மட்ட கூட்டத்துக்கு வட கொரிய சார்பில் 30 பேர் கொண்ட குழு பங்கேற்க இருக்கிறது. இந்த குழுவுக்கு நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கான குழுவின் தலைவர் Ri Son-gwon தலைமை வகிக்க உள்ளார்.

தென் கொரிய சார்பில் ஒருங்கிணைப்பு அமைச்சர் Cho Myoung-gyon தலைமையில் 5 பேர் கொண்ட குழு பங்கேற்கிறது.

இந்த கூட்டம் இரு நாடுகளை ஒருங்கிணைக்கும் பன்முன்ஜோம் கிராம எல்லையில் நடக்கிறது.

முன்னதாக வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பான வட மற்றும் தென் கொரிய அதிபர்கள் இருநாடுகளின் எல்லையில் சந்தித்துப் பேசினர்.

பின்னர், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் 12-ஆம் திகதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, அணு ஆயுத சோதனை கூடங்களை முற்றிலும் அழிப்பதாக வட கொரிய நாடு தெரிவித்தது.

அதற்கான தொழில்நுட்ப பணிகள் இந்த மாத இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதத்துக்குள் சீல் வைக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்தது.

இந்த செய்தியை டிரம்ப், கிம் ஜாங் உன்னை சந்திப்பதாக வெளியிட்ட அறிவிப்புக்கு பிறகு கூறியதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்நிலையில் தான் வட மற்றும் தென் கொரிய நாடுகள் உயர்மட்ட கூட்டத்தை நாளை நடத்துகிறது.

ஆசிரியர் - Editor