சமையலறையில் சிலிண்டர் எரிவாயு கசிந்து தீப்பற்றியதில் குடும்பஸ்தர் உயிரிழந்தார்.

சமையலறையில் சிலிண்டர் எரிவாயு கசிந்து தீப்பற்றியதில் குடும்பஸ்தர் உயிரிழந்தார்.
சமையலறையில் சிலிண்டர் எரிவாயு கசிந்து தீப்பற்றியதில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் யாழ்.கல்வியங்காடு மூன்றாம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 37 வயதான பூபதி பிரதீபன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார். 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென எரிவாயு சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து வீடு முழுவதும் மணம் வீசியுள்ளது.

இதனை உணர்ந்த பிரதீபன் சமையல் அறைக்குச் சென்று சமையல் அடுப்பை சோதித்துள்ளார். இதன்போது மூடியிருந்த சமையல் அடுப்பை அவர் திறந்தபோது திடீரென தீப்பற்றியது. இதனால் பிரதீபனின் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. 

விபரீதத்தை உணர்ந்த வீட்டார் உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை அவரது உயிர் பிரிந்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

ஆசிரியர் - Sellakumar