அடுப்பை மூட்டிய போது பெண்ணின் உடலில் தீப்பற்றி பெண் உயிரிழந்துள்ளார்

அடுப்பை மூட்டிய போது பெண்ணின் உடலில் தீப்பற்றி பெண் உயிரிழந்துள்ளார்
புகைந்துகொண்டிருந்த அடுப்புக்குள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்ற பெண்ணின் ஆடையில் தீப்பற்றிக் கொண்டதால் உடல் முழுவதும் தீக்காயங்களுக்கு உள்ளாகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இணுவில் மேற்கில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சீலன் அஸ்வினி (வயது-21) என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கடந்த 8 ஆம் திகதி மதியம் சமைப்பதற்காக அடுப்பைப் பற்ற வைக்க முயன்றார். ஏற்கனவே தீ அணையாது இருந்த அடுப்பை பற்ற வைக்க அதற்குள் இவர் மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளார். இதனால் தீப்பற்றி யுவதியின் ஆடையில் பரவி எரிந்தது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தீயில் எரிந்தவாறு அலறிய யுவதியை அயல் வீட்டில் இருந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.  

கடந்த ஆறு நாட்களாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் யுவதி நேற்று முன்தினம் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
 
இறப்பு விசாரணையை திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆசிரியர் - Sellakumar