யாழ்.இருபாலையில் முன்பள்ளி மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்ற ஆசிரியர்.

யாழ்.இருபாலையில் முன்பள்ளி மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்ற ஆசிரியர்.

முன்பள்ளி பாடசாலை மாணவர்கள் கற்றுக்கொண்டிருந்த வேளை மாணவர்களை கல்வி நிலைய மண்டபத்தினுள் வைத்து பூட்டி விட்டு முன்பள்ளி ஆசிரியை பொறுப்பற்ற முறையில் வெளியே சென்ற சம்பவத்தால் மாணவர்களின் பெற்றோர் ஆசிரியை மீது கோபத்தில் உள்ளனர்..

யாழ் இருபாலை தெற்கு கிராமசேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஞான ஒளி சனசமூக நிலையத்தில் இயங்கி வந்த முன்பள்ளிப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 தனித்து மாணவர்கள் உள்ளே இருக்கும் போது சனசமுக நிலையம் பூட்டியிருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் உரிய தரப்பினருக்கு அறிவித்திருந்தனர்.அதன்படி உடனடியாக அப்பகுதிக்கு வருகை தந்த கல்வித்திணைக்களகத்தினரால் முன்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த ஞான ஒளி சனசமூக நிலையம் நீண்டகாலமாக நிர்வாக தெரிவுகள் எதுவும் இல்லாமல் இயங்கி வருவதுடன், சின்னஞ்சிறு மாணவர்களை தனித்து விட்டு கதவை பூட்டிச் சென்றமை தொடர்பில் உரிய தரப்பினர்  நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் முன்பள்ளிப் பாடசாலயின் ஆசிரியையாக கடமையாற்றுபவர் வலி-கிழக்குப் பிரதேசசபைக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரின் விகிதாசார பட்டியலில் நியமிக்கப்பட்ட  உறுப்பினர் சிந்துஜா சண்முகராசா  என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆசிரியர் - Sellakumar