காதலனுடன் சேர்ந்து கணவனை கொலைசெய்த மனைவி

காதலனுடன் சேர்ந்து கணவனை கொலைசெய்த மனைவி


இந்தியாவில் மனைவியின் கள்ளக்காதலை கணவர் கண்டுப்பிடித்த நிலையில் அவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் கிஷன் (25), இவர் மனைவி லட்சுமி (24). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கிஷனும், லட்சுமியும் வெவ்வேறு தொழிற்சாலையில் வேலை செய்து வந்த நிலையில் தன்னுடன் பணிபுரியும் ஜெய்பிரகாஷ் (19) என்ற இளைஞருடன் லட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கிஷனுக்கு தெரியாமல் பிரகாஷை லட்சுமி அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனைவியின் கள்ளக்காதலை கிஷன் கண்டுப்பிடித்த நிலையில் இதுகுறித்து லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார்.


இது தொடர்பாக தினமும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்ட நிலையில் கிஷனை கொலை செய்ய லட்சுமி முடிவெடுத்தார்.

அதன்படி குடிப்பழக்கம் கொண்ட கிஷன் இரு தினங்களுக்கு முன்னர் மதுகுடிக்க கடைக்கு சென்ற போது, அங்கிருந்த பிரகாஷ் கிஷனுடன் நட்பாகி அவருக்கு அதிகளவு மதுவை ஊற்றி கொடுத்துள்ளார்.

பின்னர் கிஷனுக்கு போதை தலைக்கேறிய நிலையில் அவரை பிரகாஷ், வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் லட்சுமியும், பிரகாஷும் சேர்ந்து கிஷனை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளனர்.

இதையடுத்து அடுத்தநாள் அருகிலிருந்து கட்டிடத்தில் சடலத்தை தூக்கி போட்டுள்ளனர்.

சடலத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் சடலத்தை கைப்பற்றிவிட்டு பொலிசார் லட்சுமியிடம் விசாரணை நடத்தினார்கள்.

லட்சுமி முன்னுக்கு பின் முரணாக பேசிய நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் கணவரை கொன்றதை ஒப்பு கொண்டார்.

இதையடுத்து அவரையும் ஜெய் பிரகாஷையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆசிரியர் - Editor