தவறான அறுவை சிகிச்சை: கருணைக்கொலைசெய்ய கதறும் பெண்

தவறான அறுவை சிகிச்சை: கருணைக்கொலைசெய்ய கதறும் பெண்தமிழகத்தில் தவறான அறுவை சிகிச்சையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண், கருணை கொலை செய்யக்கோரி, அரசு மருத்துவமனை டீனிடம் கதறி அழுத சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியின் மணிகண்டம் பகுதியின் கண்தீனதயாள் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு அகிலா(36) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் பெருமாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், அகிலா கூலி வேலை செய்து மகனுடன் வசித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அகிலா கர்ப்பபையை அகற்றும் அறுவை சிகிச்சை செய்தார்.அப்போது அவருக்கு கவனக்குறைவாக கர்ப்பபையுடன் சிறுநீர் குழாயையும் மருத்துவர்கள் அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சிறுநீர் பிரச்சனை ஏற்பட்டது

இதன் காரணமாக அவரை அறியாமல் சிறுநீர் போனதால் அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி கடந்த 7-ஆம் திகதி பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் ஒரு மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், இந்த உடல் உபாதையுடன் உயிர் வாழ விரும்பவில்லை. எனவே என்னை கருணை கொலை செய்யுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

மனுவை பெற்ற கலெக்டர் விசாரணை நடத்தும் படி உத்தரவிட்டார். இதற்கிடையில் அகிலா, நேற்று திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு மகன் மற்றும் தன் உறவினருடன் வந்து, நடந்த சம்பவங்களை விளக்கி மருத்துவமனை டீனான அனிதாவிடம் கருணை செய்யும் கருணை மனு கொடுத்து கதறி அழுதுள்ளார்.

மனுவை படித்த டீன், கருணை கொலை செய்ய முடியாது. தவறான அறுவை சிகிச்சை செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், எனவே அறுவை சிகிச்சை செய்வதற்கு முன், பின் மருத்துவர்கள் அளித்த மருத்துவ குறிப்புகளை நாளைக்கு எடுத்து வந்தால் அதனை பார்த்தபின், மதுரைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைப்பதாக கூறினார்.
ஆசிரியர் - Editor