தவறான பதிவை டுவிட்டரில் போட்டு நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய எச்.ராஜா

தவறான பதிவை டுவிட்டரில் போட்டு நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய எச்.ராஜா
1966-இல் வாஜ்பாய் ஆட்சி அமைத்ததாக தவறான பதிவை டுவிட்டரில் போட்டுவிட்டு அதற்காக நெட்டிசன்களிடம் வசமாக சிக்கியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா

1966 ல் பாஜக என்ற கட்சியே உதயமாகவில்லை. அப்படியிருக்கையில் கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில், இப்படி உளறுகிறார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.

கர்நாடக தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. இதனால் காங்கிரஸ்- ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது. அதுபோல் பாஜகவும் 108 இடங்களை வைத்துக் கொண்டு பெரும்பான்மை என்று கூறி ஆட்சி அமைக்க கோருகிறது.

ஆனால் கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும், மற்ற கட்சிகளுடன் கைகோத்துக் கொண்டு ஆட்சியை பிடித்தது. பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது அதே பார்முலாவை பயன்படுத்தும் காங்கிரஸை மட்டும் குறை கூறுகிறது.

எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், 1966 ல் தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்ற முறையில் வாஜ்பாய் அவர்களை ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைத்தது போல் கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியின் தலைவர் BSY அவர்கள் ஆட்சி் அமைக்க அழைக்கப்பட வேண்டும் என்பதே சட்டத்தின் நிலை என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த டுவிட்டை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

1966 ல் தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்ற முறையில் வாஜ்பாய் அவர்களை ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைத்தது போல் கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியான் தலைவர் BSY அவர்கள் ஆட்சி் அமைக்க அழைக்கப்பட வேண்டும் என்பதே சட்டத்தின் நிலை.

— H Raja (@HRajaBJP) May 16, 2018
1966 ல் பாஜக என்ற கட்சியே உதயமாகவில்லைன்னு அட்மினுக்கு யாராவது சொல்லுங்களேன்.

— ஆதவன் (@EVairamuthukum1) May 16, 2018
சட்டத்தை உனக்கு ஏத்த மாதிரி மாத்திக்குவ. மணிப்பூர், கோவா, மேகாலயா மற்றும் பீகார் நியாபகம் இருக்கா?

— தமிழன் பாஸ்கி (@bosski14) May 16, 2018
ஆசிரியர் - Editor