மோசடியான ஆவணம் என செய்த்திய குணசேகர தெரிவித்த கருத்துக்கு உண்மைப் பிரதிகள் இணைப்போம் சுபாஜினி கிஷோர் பதிலடி

மோசடியான ஆவணம் என செய்த்திய குணசேகர தெரிவித்த கருத்துக்கு உண்மைப் பிரதிகள் இணைப்போம் சுபாஜினி கிஷோர் பதிலடி

மோசடியான ஆவணம் என  பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர ஆட்சேபனை தெரிவித்த போது சுந்தரம்பிள்ளை தற்போதும் உயிருடன் உள்ளார் அவரிடம் சத்திய கடதாசி வாங்குவோம் மற்றும் பிரதிகள் தான்இணைத்துள்ளோம் உண்மைப்பிரதிகள் இணைப்போம். என மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சுபாஜினி கிஷோர் தெரிவித்துள்ளார். 

நாவற்குழிப் பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று (16) தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது. 

இதன் போது   பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர  மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் , சாவகச்சேரி பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டதாக கூறப்படும் ஆவணம் பொய்யானது என தெரிவித்ததுடன் , அனைத்து ஆவணங்களும் அதன் உண்மைப் பிரதி இணைக்கப்படாமல் பிரதிகள் மாத்திரமே இணைக்கப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தார். 

அது தொடர்பில் மனு தாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் , 

 பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர  சாவகச்சேரி பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட ஆவணம் பொய்யானது என கூறியுள்ளார். 

அக்காலப் பகுதியில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சுந்தரம்பிள்ளை என்பவர் தற்போது உயிருடன் தான் உள்ளார். அதனால் குறித்த ஆவணம் உண்மையானது என்பதனை நிரூபிக்கும் வகையில் அவரிடம் சத்திய கடதாசி வாங்கவுள்ளோம். 

அத்துடன் மனுவுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைப் பிரதிகள் எம் வசம் உள்ளன அவற்றினையும் மனுவுடன் இணைக்கவுள்ளோம் என தெரிவித்தார். 



ஆசிரியர் - Sellakumar