செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கான பாதயாத்திரை இன்று ஆரம்பம்

செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கான பாதயாத்திரை இன்று ஆரம்பம்

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமத்திற்கான பாதயாத்திரை யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து இன்று(17)  காலை ஆரம்பமாகியுள்ளது.

இப்பாத யாத்திரை 46வது வருடமாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


உலக சைவத்திருச்சபையின் இலங்கைக்கான கிழக்குமாகாண இணைப்பாளரும் ஸ்ரீ நந்தவனப் பிள்ளையார் , கதிர்காம பாதயாத்திரைக்குழுவின் தலைவருமான வேல்சாமி மகேஸ்வரன் தலைமையில் 54நாட்கள் கொண்டதான இப்பாதயாத்திரையின் போது 98ஆலயங்கள் தரிசிக்கப்படவுள்ளன.


1972ஆம் ஆண்டு அமெரிக்க துறவி பற்றிக்ஹரிகனால் இந்த நீண்ட பாதயாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து 2007ஆம் ஆண்டிலிருந்து காரைதீவைச் சேர்ந்த வேல்சாமி மகேஸ்வரனிடம் அவரது பயணத்தை தொடருமாறு பற்றிக்ஹரிகன் வேண்டிக்கொண்டார்.


அதற்கிணங்க வேல்சாமி மகேஸ்வரன் தலைமையில் 2007ஆம் ஆண்டு முதல் இப்பாதயாத்திரை நடைபெற்று வருகின்றது. நாட்டின் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளின் போது இப்பாதயாத்திரை வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.


பின்னர் 2012இலிருந்து யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து இப்பாதயாத்திரை ஆரம்பமாகி 7வது தடவையாக இன்று ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் - Sellakumar