மார்பக புற்றுநோய் காரணமாக பிரபல நடிகை அய்ஷத் அபிம்போலா மரணம்

மார்பக புற்றுநோய் காரணமாக பிரபல நடிகை அய்ஷத் அபிம்போலா மரணம்
பிரபல நடிகை அய்ஷத் அபிம்போலா மார்பக புற்றுநோய் காரணமாக தனது 46-வது வயதில் உயிரிழந்துள்ளார்.

நைஜீரியன் திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் அய்ஷத் அபிம்போலா, இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நோய் பாதிப்பிலிருந்து மீள கனடா மருத்துவமனையில் அய்ஷத் சிகிச்சை பெற்று வந்தார், சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் நேற்று பிரிந்தது.

அய்ஷத்தின் மறைவுக்கு நைஜீரியா நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தலைவர் எமிகா ரோலஸ் கூறுகையில், அய்ஷத்தின் இழப்பு திரையுலகில் பெரிதாக உணரப்படும்.

அவரின் குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் உள்ள அவரின் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

ஆசிரியர் - Editor